நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்து வெளிநடப்புச் செய்த எதிர்க்கட்சியினர் ஜந்தர் மந்தருக்குச் சென்று விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு அவைகளும் கூடியதும் எதிர்க்கட்சியினர் பெகசஸ் உளவு மென்பொருள் பிரச்சனையை எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்த நிலையில் மக்களவையில் வரி விதிப்புச் சட்டங்கள் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டது.
அதன்பின் இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டன. வெளிநடப்புச் செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல்காந்தி தலைமையில் பேருந்தில் ஏறி ஜந்தர் மந்தருக்குச் சென்றனர். அங்கு விவசாயிகளுடன் சேர்ந்துகொண்டு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி முழக்கமிட்டனர்.