உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்திக்குச் சென்று ராமர் கோவில் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்திக்குச் சென்று கோவில் மாதிரி வடிவத்துக்குப் பூசைகள் செய்து வழிபட்டார். கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்தார்.
திட்டமிட்ட படி கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும் 2023ஆம் ஆண்டு இறுதியில் பக்தர்களின் வழிபாட்டுக்காகக் கோவில் திறக்கப்படும் என்றும் ராமர்கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் அறக்கட்டளை நேற்றுத் தெரிவித்தது.