மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்யவும், மாற்றவும் ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி நிறுவனத்துடன் ஸ்விக்கி உடன்பாடு செய்துகொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் செலவைக் குறைக்கவும், பணியாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கவும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ஸ்விக்கி திட்டமிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு எட்டு லட்சம் கிலோமீட்டர் என்னும் அளவில் மின்சார வாகனங்களை இயக்க இலக்கு வைத்துள்ளது. இந்நிலையில் பணியாளரின் மின்சார வாகனங்களுக்கு பேட்டரி ரீசார்ஜ் செய்யவும், உடனடியாகச் செல்ல வேண்டிய வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை மாற்றவும் ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி நிறுவனத்துடன் உடன்பாடு செய்துள்ளது.
இதன்படி நாட்டின் முதன்மையான நகரங்களில் ரிலையன்ஸ் பிபி சில்லறை விற்பனை நிலையங்களில் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான பேட்டரி மாற்று நிலையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளன.