ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாகியா வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரை எதிர்கொண்ட அவர் நான்குக்கு ஏழு என்கிற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். சுசில்குமாருக்குப் பின் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற இரண்டாவது வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அவருக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ரவிக்குமாருக்கு 4 கோடி ரூபாய் பரிசும், குரூப் 1 பிரிவில் வேலையும், பாதி விலையில் வீட்டு மனையும் வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.