கர்நாடக அமைச்சரவையில் மூத்த தலைவர்கள் பலருக்கு இடம் கிடைக்காததால் பாஜக வட்டாரத்தில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 29 அமைச்சர்களுடன் நேற்று முதலமைச்சர் பொம்மை தலைமையிலான அரசு பதவியேற்றுக் கொண்டது .
எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்பட பலருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. துணை முதல்வர்களாக யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் மூத்த தலைவர்கள் பலர் வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்தினர்.13 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்பதால் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களுக்குள் அதிருப்தி காணப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ஜகதீஷ் ஷெட்டார் , சுரேஷ் குமார், லக்ஷ்மண் சாவடி உள்பட பலர் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. கடும் அதிருப்தியுடன் பலர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனிடையே சில மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.