பண மோசடி வழக்கு தொடர்பாக அவந்தா குழுமத்தின் தலைவர் கவுதம் தாப்பரை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் எஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் மற்றும் அவரது மனைவியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக நடந்த சிபிஐ விசாரணையில், அவர்கள் டெல்லியில் சொத்து ஒன்றை சந்தை விலைக்கும் குறைவாக 307 கோடி ரூபாய்க்கு கவுதம் தாப்பரின் அவந்தா ரியல்ட்டி நிறுவனத்திடம் இருந்து பெற்று, அதற்குப் பதிலாக கவுதம் தாப்பருக்கு 1900 கோடி ரூபாய் முறைகேடாக கடன் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பையில் கவுதம் தாப்பருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கவுதம் தாப்பரை கைது செய்துள்ள அமலாக்கப்பிரிவு மீது பணமோசடி வழக்கில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணையில் எடுக்க அனுமதி கோரும் என கூறப்படுகிறது.