கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் புத்தம் புதிதாக வாங்கிய, OnePlus Nord 2 5G போன் வெடித்து கருகிய சம்பவம் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அனுகூர் ஷர்மா என்பவர் தனது மனைவிக்கு 5 நாட்களுக்கு முன் OnePlus Nord 2 5G மொபைல் போனை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், செல்போனை ஹேண்ட் பேக்கில் வைத்துவிட்டு, அந்த பெண் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென போன் வெடித்து தீப்பிடித்து கருகியுள்ளது.
இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அனுகூர் ஷர்மா, ஒன்பிளஸ் நிறுவனத்தையும் டேக் செய்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட நபர் தங்களை நேரடியாக தொடர்பு கொள்ளும்படியும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது. OnePlus nord 2 5G செல்போன் கடந்த மாதம் தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.