ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் சர்வதேச கடல் சார் பாதுகாப்பு குறித்த விவாதத்திற்கு வரும் 9 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்.
ஐநா.அமைப்பில் ஒரு இந்தியப் பிரதமர் தலைமை வகிப்பது இதுவே முதல்முறையாகும். சர்வதேச அமைதி மற்றும் கடல்சார் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெறும் விவாதத்திற்கு தலைமை ஏற்று காணொலி வாயிலாக அவர் உறுப்பினர் நாடுகளுடன் கலந்துரையாடுவார்.
ஆகஸ்ட் மாதத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.