ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்தே தயாரிக்கப்பட உள்ளதாக டாக்டர் ரெட்டிஸ் லேபராட்டரி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்புட்னிக் முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசிக்கான 36 லட்சம் டோஸ்கள் ரஷ்யாவிடமிருந்து கிடைத்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக் வி டோஸ்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 80 நகரங்களுக்கு ஸ்புட்னிக் வி அனுப்பி வைக்கப்படுவதாகவும் நாடு முழுவதும் உள்ள சுமார் 300 மருத்துவமனைகளுக்குத் தொடர்பு கொண்டு விநியோகித்து வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91 புள்ளி 6 சதவீதம் பலன் அளிப்பதாக மூன்றாம் கட்டப் பரிசோதனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.