தொழில்நுட்பத்தின் மூலமாக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் இ ரூபி திட்டம் அமைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இ-ருபி என்று அழைக்கப்படும் டிஜிட்டல் கட்டண முறையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் . அப்போது உரையாற்றிய பிரதமர், பணமில்லாத பரிவர்த்தனை, மனிதத் தொடர்பற்ற கருவி மூலமாக செலுத்தும் டிஜிட்டல் கட்டணம் போன்றவை அரசின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
பெரிய நாடுகளில் கூட இல்லாத அளவுக்கு ஃபின்டெக் மூலமாக விரிவான தொழில்நுட்பத் தளம் அமைக்கப்பட்டிருப்பதாக மோடி தெரிவித்தார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறிய மோடி, வசதி படைத்தவர்களுக்குதான் தொழில்நுட்பம் அது ஏழைகளுக்கு தேவையில்லை என்ற நிலைமை மாறிவிட்டதாகக் கூறினார்.இன்று ஏழைகளை உயர்த்துவதற்கான கருவியாக தொழில்நுட்பம் உதவி வருவதாக மோடி தெரிவித்தார்.