டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் சிந்துவை பாராட்டிய அவையின் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்த அபார சாதனையால் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வெற்றி கொண்ட முதல் இந்திய பெண் என்ற வகையில் சிந்து வரலாறு படைத்துள்ளதாக தெரிவித்தார்.
பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றதை மக்களவையில் குறிப்பிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, சிந்துவின் வரலாற்று சாதனை இந்தியாவின் இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என அவை சார்பில் தமது பாராட்டுக்களை தெரிவித்தார்.