போலீசார் மற்றும் ராணுவத்தினர் மீது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் அரசு சேவைகளுக்கான பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என ஜம்முகாஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அம்மாநில குற்றப் புலனாய்வுத்துறையின் சிறப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட பதிவுகளைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பதிவுகளில் அவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் குறிப்பிட்ட நபருக்கு பாஸ்போர்ட் மற்றும் அரசு சேவைகள் வழங்குவதை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.