ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவரின் செய்தியில், ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியப் பெண் சிந்து எனக் குறிப்பிட்டுள்ளார். தனது அர்ப்பணிப்பு, திறமை ஆகியவற்றால் புதிய உயரத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் செய்தியில், மிகச் சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை சிந்து இந்தியாவின் பெருமை எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், எதிர்காலத்தில் மேலும் பல பதக்கங்களை வெல்ல வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.