கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏறத்தாழ 100 நாட்கள் அதனுடன் போராடி வெற்றிகரமாக சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ளார் காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர்.
மீரட்டை சேர்ந்த, 45 வயதான அர்ச்சனா தேவிக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதை உறுதி செய்த பிறகு அவர் லாலா லஜபத் ராய் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் மயக்கம் அடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக இரண்டு வாரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளியைப் போல் அல்லாமல் அவருக்கு 100 நாட்கள் வரை கொரோனா பாதிப்பு நீடித்து வந்தது.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சையாலும் முயற்சியாலும் ஒருவழியாக மீண்ட அவர் 100 நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தன