அஸ்ஸாம்-மிசோரம் எல்லைப்பிரச்சினையால் மூண்ட தகராறை அடுத்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் 6 அரசு உயர் அதிகாரிகள் மீது மிசோரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற மோதலின் அடிப்படையில் கொலை முயற்சி,சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவாகியுள்ளது.மேலும் அடையாளம் தெரியாத 200 பேர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. மிசோரம் போலீசார்தான் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்ற அஸ்ஸாம் முதலமைச்சரின் புகாரை மீசோரம் முதலமைச்சர் ஜோரங்தாங்கா மறுத்துள்ளார்.
எல்லைப் பிரச்சினையில் அமைதியான தீர்வு காண விரும்புவதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருப்பதையடுத்து இரு மாநில முதலமைச்சர்களும் இன்னொரு சுற்று பேச்சு நடத்த வாய்ப்பிருப்பதாக மிசோரம் முதலமைச்சர் தெரிவித்தார்.