இரவு மிக தாமதமான நேரத்தில் சிறுமிகள் ஏன் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்கிற ரீதியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிகளின் பெற்றோரை கேள்வி எழுப்பிய கோவா முதலமைச்சருக்கு கண்டனம் வலுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10 பேர் சேர்ந்து கடற்கரையில் பார்ட்டி கொண்டாடிய நிலையில், 2 சிறுமிகள், 2 டீன்-ஏஜ் பையன்களுடன் இரவு முழுவதும் கடற்கரையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 4 பேர் போலீசார் எனக் கூறிக்கொண்டு, பையன்களை அடித்து விரட்டிவிட்டு, 2 சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டப்பேரவையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டபோது, சிறுமிகளை இரவு முழுவதும் பீச்சில் இருக்க அனுமதித்த பெற்றோர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் பிரமோத் சாவந்த் (Pramod Sawant) குறிப்பிட்டார்.
பிள்ளைகள் பேச்சைக் கேட்பதில்லை என்பதற்காக, போலீஸ் மீதும் அரசு மீதும் பொறுப்பை சுமத்திவிட முடியாது என அவர் கூறியிருந்தார். பொதுமக்களை காக்க வேண்டிய கடமை அரசுக்கும் போலீசுக்கும் உண்டு எனக் கூறியுள்ள எதிர்க்கட்சிகள், முதலமைச்சரின் கருத்து அருவருப்பானது என விமர்சித்துள்ளன.