இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் விதத்தில், 175 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, பிளின்கன் சந்தித்துப் பேசினார். பின்னர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுப் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வினியோகத்தை வலுப்படுத்தி உயிர்களை காப்பதற்கு, அமெரிக்கா 175 கோடி ரூபாய் நிதி வழங்கும் என அறிவித்தார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பெருந்தொற்றின் ஆரம்ப காலத்திற்கு அமெரிக்காவுக்கு இந்தியா அளித்த உதவிகளை மறக்க முடியாது என்றும பிளின்கன் தெரிவித்தார்.