ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் மலை கிராமமான Kishtwar -ல் மேகவெடிப்பை தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுமார் 10 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
இதுவரை 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 17 பேரில் 5 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாயமானவர்களை தேடும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினருடன் விமானப் படையினரும், ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதியில் அனைத்து உதவிகளும் கிடைக்கச் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.