டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பிய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டோக்கியோவில் இருந்து விமானத்தில் வந்து இறங்கியதும் நிலையத்தில் அவருக்கு கொரோனா சோதனைக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டது. அதன்பின் விளையாட்டுத் துறை அதிகாரிகளும் விமான நிலைய ஊழியர்களும் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீராபாய், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக 2016ஆம் ஆண்டில் இருந்தே அர்ப்பணிப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்தார். இதனிடையே மீராபாயைக் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்க மணிப்பூர் மாநில அரசு முடிவு செய்துள்ளது.