ஹங்கேரியில் நடைபெற்ற இளையோருக்கான உலகச் சாம்பியன் மல்யுத்தப் போட்டியில் 5 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணியினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவின் பிரியா மாலிக், தனு, கோமள் உட்பட 5 பேர் தங்கப் பதக்கம் வென்றனர்.
இந்நிலையில் பதக்கம் வென்ற இந்திய அணியினரைப் பாராட்டிப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், நமது விளையாட்டுத் துறையினர் தொடர்ந்து நம்மைப் பெருமைப் படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். நமது அணியினருக்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.