இந்தியா பன்முகத்தன்மை உடைய நாடு என்றும், நாங்கள் எங்கள் ஜனநாயகத்தைப் பெருமையாக நினைக்கிறோம் என்று அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
நாளை இந்தியா வர உள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் இந்திய தலைவர்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் மனித உரிமை மீறல் பிரச்சினைகளை எழுப்ப உள்ளதாக அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு தெரிவித்தது.
மனித உரிமை பிரச்சினைகள் ஒரு நாட்டுக்கு மட்டுமான பிரச்சினைகள் அல்ல என்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாளை பிளிங்கெனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் தீவிரவாதம், விமானப் போக்குவரத்து தொடங்குதல், ஆப்கானில் உள்நாட்டு யுத்தம் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் சீரான விநியோகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.