அஸ்ஸாம் பயங்கரவாதத்தைக் கைவிட்டு வளர்ச்சியை நோக்கி திரும்பியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தனது வலிமையை அதிகரித்து வருவதாக அவர் கூறினார். கவுஹாத்தியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய அமித் ஷா அஸ்ஸாமில் இரண்டாவது முறை பாஜக அரசு அமைந்திருப்பது மக்கள் வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளதன் அடையாளம் என்றார்.
சுதந்திரம் பெற்றதில் இருந்து வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் என்றும் அமித் ஷா கூறினார்