கர்நாடக முதலமைச்சர் பதவியை விட்டு எடியூரப்பா மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தமக்கு கட்சி மேலிடத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கட்சியின் மேலிட உத்தரவுக்கு தாம் காத்திருப்பதாகவும் அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் தமது தலைமையில் பாஜக ஆட்சி இரண்டு ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகள் குறித்து பேச இருப்பதாகவும் எடியூரப்பா தெரிவித்தார்.
78 வயதான எடியூரப்பா அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வந்தார். அதையடுத்து 25 ஆம் தேதிக்குப் பிறகு எடியூரப்பா மாற்றப்படுவதாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. பிரதமரின் எந்த ஒரு முடிவுக்கும் தாம் கட்டுப்படுவதாகவும் எடியூரப்பா கூறியிருந்தார்.