மும்பையில் வோர்லி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடத்தின் லிப்ட் விழுந்து நொறுங்கியதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இன்னொருவரும் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் சிகிச்சை பெற்ற வருகிறார். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஆதித்யா தாக்கரே, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்