தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததின் எதிரொலியாக கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிக்மகளூர், Shivamogga மாவட்டங்களில் ஓடும் ஹேமாவதி, பத்ரா, துங்கா ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஹெப்பாலே பகுதியிலுள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. சாலைகளிலும் வெள்ளம் ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சிக்மகளூர் அருகே கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாட்டுக் கொட்டகை இடிந்து விழுந்ததில் விவசாயியும் இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்தனர்.
வடகர்நாடகத்தில் உள்ள உப்பள்ளி-தார்வார் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் படகு மூலம் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.