செப்டம்பர் மாத வாக்கில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்க வாய்ப்புள்ளது என, எய்ம்ஸ் இயக்குநர் Dr.ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைப்பதில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என கூறினார்.
குழந்தைகளுக்கான ஸைடஸ் கெடிலாவின் தடுப்பூசி சோதனைகள் முடிந்து அவசரகால ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்ற குலேரியா, ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் மாத துவக்கத்தில் கோவேக்சினின் சோதனைகளும் நிறைவடைந்து அதற்கும் ஒப்புதல் கிடைக்கலாம் என்றார்.
குழந்தைகளுக்கான ஃபைசர் தடுப்பூசிக்கு ஏற்கனவே அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் ஒப்புதல் உள்ளது. எனவே செப்டம்பரில், குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை இந்தியாவில் துவக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் கூறினார்.