கர்நாடகா முதலமைச்சர் பொறுப்பில் இருந்து எடியூரப்பா வருகிற 26ந்தேதி 4வது முறையாக ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2007-ம் ஆண்டு குமாரசாமி தலைமையிலான ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்து 7 நாட்கள் மட்டும் எடியூரப்பா முதல்வர் பதவியில் நீடித்தார். அதன் பின்னர் 2008-ல் நடந்த தேர்தலில் சுயேட்சைகளின் ஆதரவுடன் மூன்றரை ஆண்டுகள் பதவியில் இருந்த எடியூரப்பா 2வது முறையாக பதவியை ராஜினாமா செய்தார்.
2018 சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களில் வென்றதை அடுத்து 3வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 3 நாட்களில் பதவி விலகினார்.
2019ல் 4-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற எடியூரப்பா வருகிற 26ந் தேதியுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக பாஜக மேலிட உத்தரவுப்படி தனது பதவியை 4வது முறையாக அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.