கணவரின் ஆபாசப் பட விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டை சோதனையிட்ட மும்பை குற்றப்பிரிவு போலீசார் சுமார் 6 மணி நேரம் நடிகையிடம் விசாரணை நடத்தி அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
ஒரு லேப் டாப் பறிமுதல் செய்யப்பட்டது. கணவர் முன்னிலையில் ஷில்பா ஷெட்டியிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது. ராஜ் குந்த்ராவின் Viaan Industries, அலுவலகத்தில் இருந்து தாம் இயக்குனராக இருந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து விட்டதாகவும் இந்த விவகாரத்தில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஷில்பா ஷெட்டி தமது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷில்பா ஷெட்டியின் வங்கிக் கணக்குகள், வரவு செலவுகளையும் போலீசார் ஆராய்ந்தனர்.
கடந்த திங்கட்கிழமை ஆபாசப் படம் தயாரித்து விநியோகித்த வழக்கில் ராஜ் குந்தரா உள்பட 9 பேரைபோலீசார் கைது செய்த போதும் இவ்வழக்கில் ஷில்பாவுக்கு தொடர்பு இல்லை என்பதால் கைது செய்யவில்லை.