தெலுங்கானாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. ஹன்மகொண்டாவிலிருந்து ஹைதராபாத்திற்குசென்று கொண்டுருந்த அந்தப் பேருந்து, ஜனகாமா மாவட்டம் ஸ்டேஷன்பூர் அருகே வந்தபோது, பேருந்தின் பின்பக்கம் இருந்து புகை வந்துள்ளது.
அதனைப் பார்த்த பயணிகள் ஓட்டுநருக்குத் தகவல் தெரிவிக்கவே, உடனடியாகப் பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் 39 பேரும் பாதுகாப்பாக கீழே இறக்கி விடப்பட்டனர். சிறிது நேரத்தில் பேருந்து மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கி கரும்புகை எழுந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது.