கேரளாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தொழிற்துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்துள்ளார்.
இதற்காக கேரள அரசு, தோனக்கல் உயிரியல் பூங்காவில் 10 ஏக்கர் இடத்தை ஒதுக்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.
முதலில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மொத்தமாக கொண்டு வந்து அதை குப்பியில் நிறைக்கும் தொழிற்சாலையை துவக்கவும், அதன்பின்னர் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் ஆலையை துவக்கவும், ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த ஒப்புதல் கடிதம் 3 நாட்களுக்குள் கையெழுத்தாகும் என்றும் ராஜீவ் தெரிவித்துள்ளார்.