திரிணமூல் மாநிலங்களவை எம்பி சாந்தனு சென் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாநிலங்களவையில், பெகசஸ் பிரச்சனை குறித்த அறிக்கையை வாசிக்க அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தயாராக இருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவரை நோக்கி சென்ற சாந்தனு சென், அமைச்சரின் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழித்து எறிந்தார்.
அவரது இந்த அத்துமீறலை கண்டிக்கும் வகையில் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்ய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு முடிவு செய்தார்.
இந்த நிலையில் இன்று அவைக்கு வந்த சாந்தனு சென்னை, அவையை விட்டு வெளியேறுமாறு துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கேட்டுக் கொண்டார்.