பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ கையெழுத்திட்டு தான் இந்திய அரசு பெகசஸ் உளவு மென்பொருளை வாங்கி இருக்க கூடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பெகசஸ் விவகாரம், விவசாயிகளின் நீண்ட போராட்டம் உள்ளிட்டவை தொடர்பாக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, பொதுமக்களோ, ராணுவமோ பெகசஸ் மென்பொருளை வாங்க இயலாது என்றும் அரசாங்கத்தால் மட்டுமே அதை வாங்க இயலும் என கூறினார்.
அதை வாங்கி, இந்திய ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு அமைப்புகளுக்கும் எதிராக அமித் ஷா ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனிடையே பெகசஸ் விவகாரம் குறித்து நீதிமன்ற கண்காப்பில் நீதிவிசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறியதை ஏற்க முடியாது என உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் தெரிவித்துள்ளார். அரசியலில் தோல்வி அடைந்தவர்கள் வேறு வேலை இல்லாதாதால் இப்படி குற்றஞ்சாட்டுவதாக அவர் தெரிவித்தார்.