பஞ்சாப் காங்கிரசில் எதிரும் புதிருமாக இருந்த முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் நவ்ஜோத் சித்துவும் சந்தித்து பேசினர்.
சண்டிகரில் உள்ள பஞ்சாப் ஹவுசில் நடந்த இந்த சந்திப்பால், பஞ்சாப் காங்கிரசில் நிலவிய நெருக்கடி தீர்க்கப்பட்டு விட்டதாக,காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தம்மை கடுமையாக விமர்சித்த சித்துவை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏற்க முடியாது என்று பிடிவாதமாக இருந்த அமரீந்தர் சிங் இறுதியில் கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மின் திட்டங்கள் மற்றும் குருத்வாரா தாக்குதல் தொடர்பாக அமரீந்தர் மீது சுமார் 150 அவமதிப்பு டுவிட் பதிவுகளை சித்து வெளியிட்டதே எதிர்ப்புக்கு காரணம். அதற்கு சித்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறினாலும், கட்சித் தலைமையின் ஆதரவுடன் அமரீந்தரை சித்து பணிய வைத்து விட்டார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.