மைசூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலியாக, கபினி அணை நிரம்பியது.
கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருந்தது . நேற்று மாலை கபினி அணை நிரம்பியதால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 626 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 333 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதுபோல மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 101 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 2 அணைகளில் இருந்தும் 6 ஆயிரத்து 333 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் கே.ஆர்.எஸ். அணையும் நிரம்பும் என்று நீர்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.