செல்போன் ஆடியோ வீடியோ மூலமாக ஒட்டுக் கேட்கப்படுவதால் தமது செல்போனின் கேமராவை டேப் போட்டு ஒட்டி வைத்திருப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அரசியல் வன்முறையால் உயிரிழந்த திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய மம்தா பானர்ஜி, தமது செல்போனின் கேமராவை டேப் போட்டு மூடி வைத்திருப்பதாக தமது போனை உயர்த்திக் காட்டியபடி கூறினார். தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் முக்கியத் தலைவர்களுடன் தாம் பேச முடியவில்லை என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
.ஆகஸ்ட் 16ம் தேதி கேலா தினம் கொண்டாடப்படும் என்றும் ஏழை சிறுவர்களுக்கு கால் பந்துகள் இலவசமாக அளிக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி அப்போது கூறினார்