உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஏவுகணையை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
வீரர்களே எடுத்துச் சென்று, பீரங்கிகளை தாக்கி அழிக்கும் சிறிய ரக ஏவுகணையின் தரத்தை டிஆர்டிஒ மேம்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனையில், அனைத்து விதத்திலும் இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக டிஆர்டிஒ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இரண்டரை கிலோ மீட்டர் வரை உள்ள இலக்கை தாக்க முடியும். இந்தியாவின் தற்சார்பு கொள்கைக்கு உத்வேகம் அளிக்கும் விதத்தில் இந்த திட்டம் அமைந்துள்ளது. ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டிஆர்டிஒ அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.