முறையான காரணமின்றி ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்லூரிகளுக்கு அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கொரோனா சூழலில் கல்விக்கட்டணம் பெறுவதில் தளர்வுகள் வழங்கவும், பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை அளிக்கவும் அறிவுறுத்தியதைக் கல்லூரிகள் மீறுவதாகத் தொடர்ந்து புகார்கள் வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உட்படப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும், பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இணையத்தள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.