சதித்திட்டங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைத் தடம் புரட்ட முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், உலக அரங்கில் இந்தியாவை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குக்காக மட்டுமே சில குழுக்களால் அது பெரிதாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு அனைத்துப் பிரிவினருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அமித்ஷா, சிலரால் அதை ஜீரணிக்க முடியவில்லை என்றும் நாட்டின் முன்னேற்றத்தை தடம்புரளச் செய்வதுதான் அவர்களுக்கு எப்போதுமே விருப்பம் என்றும் விமர்சித்துள்ளார்.