உலகில் 45 நாடுகள் பெகசஸ் மென்பொருளைப் பயன்படுத்தும் போது இந்தியாவை மட்டும் குறி வைப்பது ஏன் என முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெகசஸ் இணையத்தை பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். மழைக்கால கூட்டத் தொடரின் போது வேண்டுமென்றே இதுபோன்ற பிரச்னைகளை சிலர் எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பெகசஸ் பிரச்னையில் அரசுக்கோ, பாஜகவுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் குடிமக்களின் தனியுரிமைக்கான உரிமைகள் உட்பட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.