இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஐம்பதாயிரத்தை கடந்து வருவதால் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் ஜகார்தாவில் மட்டும் தினமும் 100 டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஜகார்தாவில் அந்நாட்டு அரசு நிறுவியுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் தினமும் 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டுமே நிரப்பப்படுவதால் மக்கள் 10 மடங்கு விலை கொடுத்து ஆக்சிஜன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.