தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பிரதமர் மோடியை சுமார் 50 நிமிடம், இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் டுவிட் பதிவில், இருவரும் சந்தித்துப் பேசும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளராக சரத் பவார் நிறுத்தப்படுவார் என யூகங்கள் வெளிவரும் நிலையில் இந்த திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால் பெரும்பான்மை எம்பிக்களை வைத்திருக்கும் பாஜகவின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்று பெறுவது சாத்தியமில்லை என்பதால், அந்த யூகங்களை சரத் பவார் மறுத்துள்ளார்.