உடல் நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவனி தலையீடு அதிகமாக உள்ளதாக கூறி சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் தனி விமானத்தில் மகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்ற எடியூரப்பா மோடியை சந்தித்தார்.
அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்து விலக எடியூரப்பா விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து பிரதமர் மோடி விரைவில் இறுதி முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.