கர்நாடகா அணைகளில் இருந்து தமிழக காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு சுமார் 15ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜ அணைக்கு வினாடிக்கு 12ஆயிரம் கன அடி வீதமும், கபினி அணைக்கு வினாடிக்கு 18ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இரு அணைகளின் நீர்மட்டமும் வேகமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 2,300 கன அடியும் என மொத்தமாக 15,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.