கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்புப்பணிகளுக்கான குழுவுக்குத் தலைவராக உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி நியமிக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,அடுத்த 100 அல்லது 125 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
2 தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு தடுப்பூசி போட்டவர்களால் இறப்பு விகிதம் 82 சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் கூறினார். நமது அன்றாட வாழ்வில் தவறாமல் முகக்கவசம் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் வி.கே.பால் கேட்டுக் கொண்டார்.