உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பயணிகள் இரண்டு முறை தடுப்பூசி போட்டிருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்த தேவையில்லை என்று மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.
இதற்கான பரிந்துரையை மும்பை மாநகராட்சி அரசுக்கு அண்மையில் அளித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கொரோனாRT-PCR பரிசோதனை மேற்கொண்ட அறிக்கையை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது .
இப்போது அதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தடுப்பூசி போட்ட 15 நாட்களுக்குப்பிறகு அதற்கான ஆவணத்தை காட்டினால் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.