இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை கனடா அரசு ஏற்க மறுத்துள்ளது.
வரும் 21ந் தேதி வரை இந்தியா - கனடா இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வேறு நாடு வழியாக மட்டுமே கனடாவிற்கு இந்தியர்களால் செல்ல முடியும்.
இப்படி 3வது நாட்டின் வழியாக கனடா வந்தாலும் அந்த 3வது நாட்டில் 14 முதல் 90 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகடிவ் எனும் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதி என கனடா கூறியுள்ளது.
இதனால் கனடா செல்ல விரும்பும் இந்தியர்கள் 3வது நாட்டில் குறைந்தபட்சம் 14 நாட்கள் வரை தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் கனடாவிற்கு விமான சேவை வழங்கி வரும் பல நாடுகள் இந்தியாவுடனான விமானப் பயணத்திற்கு தடை வதித்துள்ளதால், கல்வி, தொழில் நிமித்தமாக கனடா செல்ல வேண்டியவர்கள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.