புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை முதல் 9 முதல் 12அம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் நமசிவாயம் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின், தொற்று குறையாததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது தற்போதைக்கு ஒத்தி வைப்பதாகவும், பாதிப்பு குறைந்த பின்பு இது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அறிவித்தார்.