கொரோனா 3வது அலையைத் தடுக்க மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நெரிசலான இடங்களை ஒழுங்குபடுத்தவும், கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு கடுமையான வழிமுறைகளை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.
கொரோனாவின் 3வது அலை ஏற்கனவே பல்வேறு நாடுகளில் தொடங்கியுள்ள நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் பொதுப்போக்குவரத்து, மலைவாசஸ்தலங்கள் திறக்கப்பட்டதையும், மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத நிலையை அந்தச் சுற்றறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது. இதன் காரணமாக 3வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என சுற்றறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.