தெலங்கானா மாநிலத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வனத்துறை அதிகாரியை,பழங்குடியினர் தாக்கினர்.
மகாபுபாபாத் மாவட்டத்தில் உள்ள மடகுடெமில் வனத்துறைக்கு சொந்தமான தரிசு நிலத்தில் பயிரிடுவதற்காக உழவு பணியை அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் மேற்கொண்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த துணை வனசரகர் கர்ணா நாயக் என்பவர் அந்தப் பணிகளை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழங்குடியினர் அவரைத் தாக்கினர்.
பழங்குடியினரின் தாக்குதலில் இருந்து வன அதிகாரியை மீட்ட பாதுகாப்புபடையினர்,தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்தனர்.