இந்தியாவின் முதல் கொரோனா நோயாளியான, கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவிக்கு மீண்டும் கொரோன வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
சீனாவின் வூகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும், திரிச்சூரை சேர்ந்த அந்த மாணவிக்கு, சொந்த ஊர் திரும்பிய பின் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. 3 வாரங்கள் சிகிச்சை பெற்ற பின் அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் டெல்லி செல்வதற்காக கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட போது, மீண்டும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. எனினும் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், வீட்டில் நலமாக இருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.